வ
꧁. 🌈 வ🔯 மேஷம் -ராசி: 🐐
சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
⭐️அஸ்வினி : அறிமுகங்கள் ஏற்படும்.
⭐️பரணி : ஒத்துழைப்புகள் ஏற்படும்.
⭐️கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.
♉ ரிஷபம் – ராசி: 🐂
நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வாகன கடன் உதவிகள் சாதகமாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்களால் ஆதாயம் மேம்படும்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.
⭐️கிருத்திகை : விட்டுக்கொடுத்து செல்லவும்.
⭐️ரோகிணி : உதவிகள் சாதகமாகும்.
⭐️மிருகசீரிஷம் : ஆதாயம் மேம்படும்.
♊ மிதுனம்- ராசி: 🤼♀
பழக்கவழக்கங்களில் சிறுசிறு மாற்றங்கள் உருவாகும். எதிலும் பற்றற்ற தன்மை உண்டாகும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். சிந்தனையின் போக்கில் புதுமைகள் பிறக்கும். கடினமான வேலைகளையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். நாவல் சார்ந்த செயல்பாடுகளில் விருப்பம் உண்டாகும்.
💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
⭐️மிருகசீரிஷம் : மாற்றங்கள் உருவாகும்.
⭐️திருவாதிரை : புதுமைகள் பிறக்கும்.
⭐️புனர்பூசம் : விருப்பம் பிறக்கும்.
♋ கடகம் – ராசி: 🦀
திறமைக்கான புதிய வாய்ப்புகள் ஏற்படும். வர்த்தக பணிகளில் மேன்மையான சூழல் அமையும். செல்வ சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மறதி தொடர்பான சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரம் நிமித்தமான முடிவுகளில் சிந்தித்து செயல்படவும்.
💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
⭐️புனர்பூசம் : வாய்ப்புகள் ஏற்படும்.
⭐️பூசம் : சிந்தனைகள் மேம்படும்.
⭐️ஆயில்யம் : சிந்தித்து செயல்படவும்.
♌ சிம்மம் – ராசி: 🦁
மனதில் இருந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் மேம்படும். விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். பயணம் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். பத்திர விஷயங்களில் மேன்மை ஏற்படும்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
⭐️மகம் : பிரச்சனைகள் குறையும்.
⭐️பூரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
⭐️உத்திரம் : மேன்மை ஏற்படும்.
♍ கன்னி – ராசி: 👩
கணவன் மனைவிக்குள் மனம் விட்டு பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும்.
💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல் நிறம்.
⭐️உத்திரம் : பொறுமையுடன் செயல்படவும்.
⭐️அஸ்தம் : உற்சாகம் பிறக்கும்.
⭐️சித்திரை : மதிப்புகள் அதிகரிக்கும்.
♎ துலாம் – ராசி: ⚖
நண்பர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். மற்றவர்களுடன் ஒப்பிடுவதை தவிர்க்கவும். கலை துறைகளில் கவனம் வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் மலரும். நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். கால்நடை விஷயங்களில் தெளிவுகள் ஏற்படும்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
⭐️சித்திரை : புரிதல் ஏற்படும்.
⭐️சுவாதி : கவனம் வேண்டும்.
⭐️விசாகம் : தெளிவுகள் ஏற்படும்.
♏ விருச்சிகம் – ராசி: 🦂
எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மாற்றம் உண்டாகும். பிரிந்து சென்றவர்களை பற்றிய நினைவுகள் மேம்படும். பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் மனக்குழப்பங்கள் ஏற்படும். பயணங்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். கடன் சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்.
⭐️விசாகம் : மாற்றம் உண்டாகும்.
⭐️அனுஷம் : அனுபவம் கிடைக்கும்.
⭐️கேட்டை : விவேகம் வேண்டும்.
♐ தனுசு – ராசி: 🏹
குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அரசு காரியத்தில் ஆதாயம் உண்டாகும். புதிய நபர்களால் மாற்றமான சூழல் ஏற்படும். மனதளவில் தெளிவுகள் பிறக்கும். சமுக பணிகளில் மதிப்புகள் மேம்படும். வித்தியாசமான மின்னணு பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் இலாபம் மேம்படும்.
💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : மயில் நீல நிறம்.
⭐️மூலம் : ஆதாயம் உண்டாகும்.
⭐️பூராடம் : தெளிவுகள் பிறக்கும்.
⭐️உத்திராடம் : இலாபம் மேம்படும்.
♑ மகரம் – ராசி: 🦌
விரும்பிய விஷயங்களை அடைவதற்கான சூழல் அமையும். கலை சார்ந்த துறைகளில் மதிப்புகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிய வியாபாரம் குறித்த ஆலோசனைகள் ஏற்படும். எதிர்கால சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். பொது காரியங்களில் ஒத்துழைப்பு ஏற்படும்.
💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்.
⭐️உத்திராடம் : மதிப்புகள் மேம்படும்.
⭐️திருவோணம் : ஆலோசனைகள் ஏற்படும்.
⭐️அவிட்டம் : ஒத்துழைப்பு ஏற்படும்.
♒ கும்பம் – ராசி: 🍯
நினைத்த பணிகள் தடையின்றி முடியும். வியாபாரத்தில் தள்ளிப்போன சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். எதிராக இருந்தவர்கள் விலகுவார்கள். ஆரோக்கிய விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். உத்தியோகத்தில் இருந்த சிக்கல்கள் குறையும். மனதளவில் தெளிவுகள் ஏற்படும். எதிலும் துடிப்புடன் செயல்படுவீர்கள். திருப்பணி செயல்களில் ஆர்வம் உண்டாகும்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்.
⭐️அவிட்டம் : ஒப்பந்தங்கள் சாதகமாகும்.
⭐️சதயம் : கவனத்துடன் செயல்படவும்.
⭐️பூரட்டாதி : ஆர்வம் உண்டாகும்.
♓ மீனம் – ராசி: 🐟
எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுகளை நம்பி முதலீடுகளை செய்வதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும். உத்தியோகப் பொறுப்புகளால் சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
⭐️பூரட்டாதி : தாமதம் ஏற்படும்.
⭐️உத்திரட்டாதி : விழிப்புணர்வு வேண்டும்.
⭐️ரேவதி : சோர்வுகள் நீங்கும்.