முன்னாள் முதலமைச்சர், அம்மையார் ஜெயலலிதா அவர்களின் நேர்முக உதவியாளர் J Poongunran Sankaralingam அவர்களின் சிறப்பான பதிவு!

ஒரு குடும்பத்தின் வெற்றி என்பது வெறும் அதிகாரத்திலோ அல்லது பொருளாதார வளர்ச்சியிலோ மட்டும் அடங்கியது அல்ல; மாறாக, கணவன் – மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் கொடுக்கும் மரியாதையிலும், ஒருவருக்கொருவர் காட்டும் அன்பிலும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதிலும், ஒருவரின் வளர்ச்சியை மற்றவர் மனதார ஏற்றுக்கொள்வதிலும்தான் உண்மையான மகிழ்ச்சி நிலைத்திருக்கிறது.

​சமூகத்தில் பலரும் பார்த்து புருவத்தை உயர்த்தும் வகையில், இன்று மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தனது குடும்ப வாழ்க்கையிலும், பொதுவாழ்விலும் வெளிப்படுத்தும் முதிர்ச்சியும் பக்குவமும் என்னைப் போன்ற எண்ணற்றவர்களுக்கு ஒரு மிகச்சிறந்த பாடமாக திகழ்கிறது.

வர வர மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கிறது. காரணம்,

​பொதுவாக, தன் மனைவியின் பெயரும் புகழும் பேசப்படும் போது பல ஆண்களிடம் ஒருவித தயக்கமோ அல்லது சஞ்சலமோ ஏற்படுவது இயல்பு. ஆனால், அதையெல்லாம் தாண்டி, தனது மனைவியின் ஒவ்வொரு வெற்றியையும் பெருமிதத்தோடு ஏற்றுக்கொண்டு, அவரோடு இணைந்து பொதுவெளியில் வலம் வரும் அவரது தன்மை எளிய மனிதர்களையும் ஈர்க்கிறது.

​எங்கு சென்றாலும் குடும்பமாகச் சென்று அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பு, அவரை ஒரு பரிபூரண குடும்பத் தலைவனாகக் காட்டுகிறது.

​எந்த ஒரு குறிப்பும் இல்லாமல், எதையும் துல்லியமாகக் கற்றுக்கொண்டு மேடைகளில் தெளிவான கருத்துக்களைப் பேசும் அவரது ஆற்றல் எல்லோராலும் பாராட்டப்படுகிறது.

எத்தகைய சூழலிலும் தன்னைச் சமநிலைப்படுத்திக் கொண்டு, சிரித்த முகத்தோடு தன்னை ஒரு பக்குவப்பட்ட மனிதராக வெளிப்படுத்திக் கொள்ளும் அவரது சாந்தமான இயல்பு பலரைக் கவர்ந்துள்ளது. எதிர்ப்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டு இயல்பாக அனைவரிடமும் பழகும் பாங்கு வியப்பிற்குரியது. இவை அனைத்தும் மருத்துவரை ஒரு நல்ல தலைவனாக உயர்த்திக் காட்டுகிறது. இன்று அவருடைய பக்குவப்பட்ட நிலை அவருடைய பெயருக்கான விளக்கமாகத் தோன்றுகிறது.

ஐயா ​ராமதாஸ் அவர்களுடன் எனக்கு நெருங்கிய பழக்கம் உண்டு. குறிப்பாக 1998 தேர்தலின் போது, எனது இளம் வயதிலேயே அவர் என் மீது காட்டிய பேரன்பும், என்னை அரவணைத்த விதமும் இன்றும் என் நினைவில் பசுமையாக நிற்கிறது. அன்று தொட்டு இன்றுவரை அந்த குடும்பத்தின் மீதும், அவர்களின் உழைப்பின் மீதும் எனக்கு பேரன்பு மிக்க மரியாதை உண்டு.

​அத்தகைய பெருமைக்குரிய குடும்பத்தின் வாரிசாக வந்து, இன்று அரசியலிலும் குடும்ப வாழ்க்கையிலும் ஒருசேர மிளிரும் மருத்துவர் அன்புமணி அவர்களின் பண்பாடு பலரை வியக்க வைக்கிறது. இதைப் பார்த்த நானும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள தொடங்கியிருக்கிறேன்.
​جو
​”தலைவனுக்கு முன்னால் தொண்டனையும், கணவனுக்கு முன்னால் மனைவியையும் பாராட்டுவது என்பது எல்லோராலும் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஆனால், தன் துணையை உயர்த்திக் காட்டும் அந்த உயர்ந்த உள்ளம்தான் இன்று அன்புமணி அவர்களை அனைவரின் ரோல் மாடலாக மாற்றியுள்ளது.”

​இன்றைய தலைமுறை கணவன்மார்கள் அனைவரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது. மனைவியின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்காமல், அவளது ஒவ்வொரு அடியிலும் உற்ற துணையாக நின்று அழகு பார்ப்பதே உண்மையான ஆளுமை.

பின்குறிப்பு: எதற்கும் ஒரு முறை சுத்தி போட்டுகோங்க..!

100% LikesVS
0% Dislikes

கட்டுரையைப் பகிர்:

வணக்கம்! நான் கு. நந்தகுமார். வாசிப்பும் எழுத்தும் மீது ஆர்வம் கொண்டவன். பல்வேறு தலைப்புகளில் பயனுள்ள தகவல்கள் மற்றும் கருத்துகளை இந்த வலைப்பதிவின் மூலம் வாசகர்களுடன் பகிர்கிறேன்.

உங்கள் கருத்தை பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

Edit Template