
🔯 மேஷம் -ராசி: 🐐
எதிர்பாராத தனவரவுகள் மேம்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதை உறுத்திய சில கவலைகள் விலகும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் மாற்றமான வாய்ப்புகளும் சூழ்நிலைகளும் ஏற்படும். பொன் பொருள் சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும்.
🧭அதிர்ஷ்ட திசை : தெற்கு
🔢அதிர்ஷ்ட எண் : 2
🎨அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
⭐️அஸ்வினி : தனவரவுகள் மேம்படும்.
⭐️பரணி : கவலைகள் விலகும்.
⭐️கிருத்திகை : வாதங்களை தவிர்க்கவும்.
♉ ரிஷபம் – ராசி: 🐂
பழைய சிந்தனைகள் மூலம் செயல்பாடுகளில் தாமதம் ஏற்படும். சுப காரிய பேச்சுவார்த்தையில் நிதானத்துடன் இருக்கவும். உடன் இருப்பவர்களின் குணம் அறிந்து நடந்து கொள்ளவும். உடலில் ஒரு விதமான அசதிகள் தோன்றி மறையும். உங்கள் மீதான வதந்திகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும்.
🧭அதிர்ஷ்ட திசை : கிழக்கு
🔢அதிர்ஷ்ட எண் : 1
🎨அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்
⭐️கிருத்திகை : தாமதம் ஏற்படும்.
⭐️ரோகிணி : குணமறிந்து செயல்படவும்.
⭐️மிருகசீரிஷம் : நிதானம் வேண்டும்.
♊ மிதுனம்- ராசி: 🤼♀
உறவினர்களின் சந்திப்பு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். ஆடம்பரச் செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். பிரபலமானவர்களின் ஆலோசனைகள் மனதில் புதிய தெளிவை ஏற்படுத்தும். தெய்வீக பணிகளில் ஆர்வம் உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். முக்கியமான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். உடன் இருப்பவர்களை பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும்.
🧭அதிர்ஷ்ட திசை : மேற்கு
🔢அதிர்ஷ்ட எண் : 6
🎨அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
⭐️மிருகசீரிஷம் : நெருக்கடிகள் ஏற்படும்.
⭐️திருவாதிரை : ஆர்வம் உண்டாகும்.
⭐️புனர்பூசம் : புதுமையான நாள்.
♋ கடகம் – ராசி: 🦀
உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அரசு பணிகளில் இழுபறியான சூழல் மறையும். வியாபார அபிவிருத்திக்கான எண்ணங்கள் மேம்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.
🧭அதிர்ஷ்ட திசை : தெற்கு
🔢அதிர்ஷ்ட எண் : 2
🎨அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்
⭐️புனர்பூசம் : ஆதரவான நாள்.
⭐️பூசம் : அபிவிருத்தியான நாள்.
⭐️ஆயில்யம் : முன்னேற்றம் உண்டாகும்.
♌ சிம்மம் – ராசி: 🦁
நண்பர்கள் ஆதரவாக பேசுவார்கள். சமூக பணிகளில் மரியாதையும் உயரும். பெரியவர்களின் ஆலோசனை கைகொடுக்கும். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். கணவன்-மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழிலில் மாற்றம் பிறக்கும்.
🧭அதிர்ஷ்ட திசை : மேற்கு
🔢அதிர்ஷ்ட எண் : 9
🎨அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
⭐️மகம் : மரியாதை உயரும்.
⭐️பூரம் : முன்னேற்றம் ஏற்படும்.
⭐️உத்திரம் : மாற்றம் பிறக்கும்.
♍ கன்னி – ராசி: 👩
வித்தியாசமான சில சிந்தனைகள் மூலம் மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கடன் நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். நிர்வாகத் துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணி நிமித்தமான பயணம் ஏற்படும்.
🧭அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
🔢அதிர்ஷ்ட எண் : 3
🎨அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
⭐️உத்திரம் : குழப்பம் நீங்கும்.
⭐️அஸ்தம் : வாய்ப்புகள் உண்டாகும்.
⭐️சித்திரை : கவனம் வேண்டும்.
♎ துலாம் – ராசி: ⚖
திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறுவதில் அலைச்சல்கள் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். எழுத்து சார்ந்த பணிகளில் சற்று நிதானத்தை கையாள்வது மேன்மையே ஏற்படுத்தும். கடன் தொடர்பான பிரச்சினைகள் மூலம் மனவருத்தங்கள் நேரிடலாம். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும்.
🧭அதிர்ஷ்ட திசை : மேற்கு
🔢அதிர்ஷ்ட எண் : 9
🎨அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
⭐️சித்திரை : அலைச்சல்கள் உண்டாகும்.
⭐️சுவாதி : மேன்மையான நாள்.
⭐️விசாகம் : விட்டுக் கொடுத்துச் செல்லவும்.
♏ விருச்சிகம் – ராசி: 🦂
கடன் சார்ந்த உதவிகள் சாதகமாகும். பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். கற்பனை துறைகளில் மேன்மை உண்டாகும். சுபகாரியம் சார்ந்த எண்ணம் ஈடேறும். சிலரின் அறிமுகங்கள் மூலம் மாற்றங்கள் காணப்படும். நண்பர்களுக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வர்த்தக பணிகளில் மேன்மை ஏற்படும்.
🧭அதிர்ஷ்ட திசை : தெற்கு
🔢அதிர்ஷ்ட எண் : 2
🎨அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
⭐️விசாகம் : உதவிகள் சாதகமாகும்.
⭐️அனுஷம் : மாற்றங்கள் பிறக்கும்.
⭐️கேட்டை : மேன்மை ஏற்படும்.
♐ தனுசு – ராசி: 🏹
நெருக்கமானவர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் ஏற்படும். சேமிப்பு விஷயங்களில் ஆலோசனை கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் சாதகமான சூழல் உண்டாகும். நெருக்கமானவர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உத்தியோக முயற்சிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள்.
🧭அதிர்ஷ்ட திசை : கிழக்கு
🔢அதிர்ஷ்ட எண் : 1
🎨அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
⭐️மூலம் : மகிழ்ச்சியான நாள்.
⭐️பூராடம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
⭐️உத்திராடம் : புரிதல் ஏற்படும்.
♑ மகரம் – ராசி: 🦌
மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். நண்பர்கள் மூலம் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். தந்தை வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும்.
🧭அதிர்ஷ்ட திசை : வடக்கு
🔢அதிர்ஷ்ட எண் : 3
🎨அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
⭐️உத்திராடம் : இலக்குகள் பிறக்கும்.
⭐️திருவோணம் : ஆர்வம் அதிகரிக்கும்.
⭐️அவிட்டம் : ஆதரவுகள் கிடைக்கும்.
♒ கும்பம் – ராசி: 🍯
வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். ஆரோக்கிய இன்னல்கள் குறையும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும்.
🧭அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
🔢அதிர்ஷ்ட எண் : 9
🎨அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்
⭐️அவிட்டம் : தீர்ப்புகள் கிடைக்கும்.
⭐️சதயம் : புரிதல் அதிகரிக்கும்.
⭐️பூரட்டாதி : தெளிவுகள் பிறக்கும்.
♓ மீனம் – ராசி: 🐟
கடன்கள் விஷயத்தில் சிந்தித்து செயல்படவும். தள்ளிப்போன காரியங்கள் சில முடியும். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். தெய்வீகக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சவாலான செயலை செய்வீர்கள். அக்கம் பக்கத்தில் உங்களின் செல்வாக்கு உயரும்.
🧭அதிர்ஷ்ட திசை : கிழக்கு
🔢அதிர்ஷ்ட எண் : 1
🎨அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
⭐️பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.
⭐️உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐️ரேவதி : செல்வாக்கு உயரும்.
🪷🪷🪷🪷🪷