இன்றைய இராசி பலன். ஆன 13, புதன் கிழமை, 17.06.2026.

ஆ🔯 மேஷம் -ராசி: 🐐

உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களின் ஆதரவுகள் மேம்படும். கால்நடை சார்ந்த வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். தொழில் சார்ந்த பயணங்கள் கைகூடும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்த பணியில் அலைச்சல்கள் உண்டாகும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் குறையும்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : சந்தனிறம்.

⭐️அஸ்வினி : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

⭐️பரணி : மேன்மை உண்டாகும்.

⭐️கிருத்திகை : குழப்பங்கள் குறையும்.

♉ ரிஷபம் – ராசி: 🐂

புதிய யுக்திகளால் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். சொத்துக்கள் விற்பது மற்றும் வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். நவீன தொழில்நுட்ப கருவிகளை வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களில் இருந்த தடைகள் மறையும். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகப் பணிகளில் திருப்தியான சூழல்கள் உண்டாகும்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 7

💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐️கிருத்திகை : முயற்சிகள் கைகூடும்.

⭐️ரோகிணி : தடைகள் மறையும்.

⭐️மிருகசீரிஷம் : திருப்தியான நாள்.

♊ மிதுனம்- ராசி:

குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். பழைய நினைவுகள் மூலம் செயல்பாடுகளில் தடுமாற்றம் உண்டாகும். சூழ்நிலைக்கு ஏற்ப விட்டு கொடுத்து செல்லவும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். சாதுர்யமான பேச்சுக்களால் அனைவரையும் கவர்வீர்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 4

💠அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்.

⭐️மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.

⭐️திருவாதிரை : விட்டு கொடுத்து செல்லவும்.

⭐️புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.

♋ கடகம் – ராசி: 🦀

குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். தன வரவுகள் மூலம் சேமிப்பு மேம்படும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். வித்தியாசமான கற்பனைகள் மூலம் குழப்பமான சூழல் ஏற்படும். வர்த்தக செயல்களில் பொறுமையுடன் செயல்படவும். நீண்ட நேரம் கண்விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவுகள் பிறக்கும்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு

💠அதிர்ஷ்ட எண் : 2

💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐️புனர்பூசம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.

⭐️பூசம் : குழப்பமான நாள்.

⭐️ஆயில்யம் : தெளிவுகள் பிறக்கும்.

♌ சிம்மம் – ராசி: 🦁

உத்தியோகத்தில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். பொன் பொருள்களில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத் தன்மை ஏற்படும். வாக்குறுதி அளிக்கும் போது விவேகம் வேண்டும். இழுபறியான சில வேலைகள் முடிவு பெறும். கால்நடை சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். முதலீடு விஷயங்களில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 9

💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்.

⭐️மகம் : வாய்ப்புகள் ஏற்படும்.

⭐️பூரம் : விவேகம் வேண்டும்.

⭐️உத்திரம் : ஆலோசனை வேண்டும்.

♍ கன்னி – ராசி: 👩

உத்தியோக பணியில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். உறவினர்கள் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள். சொத்துப் பிரச்னைகளில் தெளிவான முடிவுகள் பிறக்கும். தொழில் சார்ந்த பயணம் மூலம் மனதில் நினைத்த காரியம் ஈடேறும். சமூகப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

⭐️உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

⭐️அஸ்தம் : முடிவுகள் பிறக்கும்.

⭐️சித்திரை : முன்னேற்றம் ஏற்படும்.

♎ துலாம் – ராசி: ⚖

அரசு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வாழ்க்கைத் துணைவர் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வர்த்தக பணிகளில் மேன்மை ஏற்படும். வியாபார நிமித்தமான புதிய நபர்களின் ஒத்துழைப்புகள் உண்டாகும். மாணவர்களுக்கு தெளிவும் புத்துணர்ச்சியும் ஏற்படும். வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 1

💠அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்.

⭐️சித்திரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

⭐️சுவாதி : மேன்மை ஏற்படும்.

⭐️விசாகம் : முயற்சிகள் கைகூடும்.

♏ விருச்சிகம் – ராசி: 🦂

ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். தந்தை வழி சொத்துக்களில் இருந்து வந்த இழுபறிகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

⭐️விசாகம் : இழுபறிகள் குறையும்.

⭐️அனுஷம் : ஆதாயம் உண்டாகும்.

⭐️கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.

♐ தனுசு – ராசி:  🏹

மற்றவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவதில் விவேகம் வேண்டும். வாகன பழுதுகளை சீர் செய்தீர்கள். உணர்ச்சி வேகம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருப்பது நல்லது. செயல்களின் தன்மை அறிந்து செயல்படவும். வழக்கு சார்ந்த விஷயங்களில் அலைச்சல்கள் உண்டாகும்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 4

💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்.

⭐️மூலம் : விவேகம் வேண்டும்.

⭐️பூராடம் : பொறுமையுடன் செயல்படவும்.

⭐️உத்திராடம் : அலைச்சல்கள் உண்டாகும்.

♑ மகரம் – ராசி: 🦌

பெருந்தன்மையான செயல்பாடுகள் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கும். புதிய துறை சார்ந்த ஆர்வம் அதிகரிக்கும். முகத்தில் புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். புதுவிதமான உணவுகளை உண்டு மனம் மகிழ்வீர்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்.

⭐️உத்திராடம் : அறிமுகம் கிடைக்கும்.

⭐️திருவோணம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.

⭐️அவிட்டம் : ஆதரவான நாள்.

♒ கும்பம் – ராசி: 🍯

விருந்தினர்களின் வருகைகள் ஏற்படும். கால்நடை வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். உடலில் இருந்து வந்த சோர்வுகள் குறையும். எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு

💠அதிர்ஷ்ட எண் : 7

💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️அவிட்டம் : மேன்மை ஏற்படும்.

⭐️சதயம் : சோர்வுகள் குறையும்.

⭐️பூரட்டாதி : முடிவுகள் கிடைக்கும்.

♓ மீனம் – ராசி: 🐟

குடும்ப உறுப்பினர்களிடத்தில் ஒற்றுமை ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். குழந்தைகள் வழியில் அலைச்சலும் மகிழ்ச்சியும் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பட்டுகள் வரும். பழைய நினைவுகள் மூலம் இன்பமான சூழல் ஏற்படும். வியாபார பணிகளில் சில மாற்றங்கள் மூலம் மேன்மை ஏற்படும்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 9

💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்.

⭐️பூரட்டாதி : ஒற்றுமை ஏற்படும்.

⭐️உத்திரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.

⭐️ரேவதி : மேன்மை ஏற்படும்.

50% LikesVS
50% Dislikes

கட்டுரையைப் பகிர்:

வணக்கம்! நான் கு. நந்தகுமார். வாசிப்பும் எழுத்தும் மீது ஆர்வம் கொண்டவன். பல்வேறு தலைப்புகளில் பயனுள்ள தகவல்கள் மற்றும் கருத்துகளை இந்த வலைப்பதிவின் மூலம் வாசகர்களுடன் பகிர்கிறேன்.

உங்கள் கருத்தை பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

Edit Template