பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் தலைமைக்குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையில் சென்னையில் நேற்று (26.05.2026) செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் திரு.வடிவேல் இராவணன், பொருளாளர் திருமதி. திலகபாமா, சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி மற்றும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். கட்சி வளர்ச்சிப் பணிகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பாட்டாளி மக்கள் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், கிளை, பேரூர், நகர, ஒன்றிய, மாவட்ட அளவில் கட்சி நிர்வாகத்தை மறு சீரமைக்க இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக அனைத்து மாவட்டங்களுக்கும் குழுக்களை அனுப்பி ஆய்வு செய்வதென்றும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரின் கருத்துகளைக் கேட்டறிந்து, அதனடிப்படையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து கட்சித் தலைமைக்கு குழுக்கள் அறிக்கை தாக்கல் செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
குழுக்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் உரிய மாற்றங்களை கட்சித் தலைவர் மேற்கொள்வார்.
இப்படிக்கு,
தலைமை நிலையம்,
பாட்டாளி மக்கள் கட்சி,
தியாகராயர் நகர், சென்னை &17