
“நீட்” பள்ளிப் படிப்பை சிதைத்துவிடும், சந்தையின் இலாப வெறிக்கு மாணவர்கள் இரையாக்கப்படுவார்கள், அதன் விளைவாக அரசின் பொதுச் சுகாதாரத்துறையே சீரழியும் அபாயம் உள்ளது என்ற எச்சரிக்கையை 2016 ஆண்டு முதல் விரிவாக விவாதிக்கப்பட்டது.
வெளிப்படுத்தப்பட்ட அச்சங்கள் ஒவ்வொன்றும் உண்மை என்பதை கடந்த பத்து ஆண்டுகளாக நடந்துவரும் “நீட்” முறைகேடுகள் நிரூபித்துள்ளது.
“நீட்” என்பது மதிப்பீட்டு முறையே அல்ல, “நீட்” கற்றல் செயல்பாட்டிற்கே மிகப் பெரும் அச்சுறுத்தல் என்பதை 2017 முதல் 2026 வரை நடந்துள்ள “நீட்” நிரூபித்துள்ளது.
“நீட்” முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்பட்டு, மேல்நிலைப் பள்ளிக் கல்வி (+2) வாரியத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ இளநிலைப் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை என்ற நடைமுறை மட்டுமே தீர்வாக அமையும்.
இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலக் கல்வி வாரியங்கள் மற்றும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்தும் தேர்வு ஆகியவற்றின் முடிவுகளை மதிப்பெண் சமப்படுத்துதல் (Normalisation) முறையில் தகுதி வாய்ந்தவர்கள் மருத்துவக் கல்வி பெறுவதை உறுதி செய்ய முடியும்.
“நீட்” முற்றிலுமாக விலக்கிக் கொள்ள ஒன்றிணைந்து ஒன்றிய அரசை வலியுறுத்துவதே தீர்வாக அமையும்.
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு
பொதுச் செயலாளர்,
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை
14.05.2026