530 கார்களை வாங்கி தனிநபர் வாகன அருங்காட்சியகம்

பிரான்ஸ் நாட்டில் கார் பிரியர் ஒருவர் 530 கார்களை வாங்கி தனிநபர் வாகன அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்கி உள்ளார்.

அந்நாட்டின் கிரிக்னி-சுர்-ரோன் நகரில் வசித்து வரும் ஸ்டெபான் செர்குவேரா தமது 16 வது வயதில் நண்பரிடம் இருந்து பரிசாக கார் ஒன்றை பெற்றார்.

இதன் பின்னர் கார்கள் மீதான ஆர்வம் தீவிரமாக, உலகின் பல நாடுகளுக்கும் சென்று வித,விதமான கார்களை வாங்கும் பணியில் ஈடுபட்டாதாக அவர் கூறினார்.

இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து வாங்கி உள்ள கார்களின் எண்ணிக்கை இப்போது 530 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர் கென்னடி குடும்பத்தினரின் கெடிலாக் கார் உள்ளிட்ட பழமையை பறை சாற்றும் அவரது கார்களின் அணிவகுப்பு இப்போது பார்வையார்களை கவர்ந்து இழுத்து வருகிறது.

50% LikesVS
50% Dislikes

கட்டுரையைப் பகிர்:

வணக்கம்! நான் கு. நந்தகுமார். வாசிப்பும் எழுத்தும் மீது ஆர்வம் கொண்டவன். பல்வேறு தலைப்புகளில் பயனுள்ள தகவல்கள் மற்றும் கருத்துகளை இந்த வலைப்பதிவின் மூலம் வாசகர்களுடன் பகிர்கிறேன்.

உங்கள் கருத்தை பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

Edit Template