மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் கோலாகலம்.

உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. மதுரை மாநகரில் உலகப் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான மீனாட்சி அம்மன் – சொக்கநாதர் திருக்கல்யாண வைபவம் இன்று பக்திப் பரவசத்துடன் மிக விமரிசையாக நடைபெற்றது. www.maghiznanmuzhakam.com வண்ண மலர்களாலும், நறுமணத் துளசி மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட திருக்கோயில் மண்டபத்தில், அன்னை மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்கும் வேத மந்திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்கள் இசைக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் இந்த தேவலோகத் திருமணம் இனிதே அரங்கேறியது. மதுரையின் அரசியான மீனாட்சி அம்மனுக்குப் பட்டு வஸ்திரம் சாத்தப்பட்டு, வைரக் கற்கள் பதித்த திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்ட அந்தப் புனிதமான தருணத்தில், அங்கிருந்த ஒட்டுமொத்த பக்தர் கூட்டமும் “மீனாட்சி… சொக்கநாதா…” என்ற முழக்கத்துடன் தங்கள் கரகோஷங்களை எழுப்பினர். வேத மந்திரங்கள் ஓத பவளக்கனிவாய் பெருமாள் தாரைவார்த்துக் கொடுக்க, பக்தர்களின் வாழ்த்தொலி விண்ணை முட்ட, மீனாட்சியம்மன் கழுத்தில் வைரக்கல் பதித்த தங்க திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. இந்த தெய்வீகத் திருமணத்தைக் காண்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் மதுரையில் திரண்டுள்ள நிலையில், திருக்கல்யாணம் முடிந்தவுடன் மங்கல நாண் மாற்றிக் கொள்ளும் வழக்கப்படி பெண் பக்தர்கள் அனைவரும் புதிய தாலிச் சரடை மாற்றிக் கொண்டு தங்களின் மாங்கல்ய பலம் பெருக வேண்டிக் கொண்டனர்.

100% LikesVS
0% Dislikes

கட்டுரையைப் பகிர்:

வணக்கம்! நான் கு. நந்தகுமார். வாசிப்பும் எழுத்தும் மீது ஆர்வம் கொண்டவன். பல்வேறு தலைப்புகளில் பயனுள்ள தகவல்கள் மற்றும் கருத்துகளை இந்த வலைப்பதிவின் மூலம் வாசகர்களுடன் பகிர்கிறேன்.

உங்கள் கருத்தை பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

Edit Template