இராம நவமி

இராமரின் பிறப்பைக் கொண்டாடும் இந்து பண்டிகையான இராம நவமி இன்று நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. இராம நவமி விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான இராமரின் பிறப்பைக் குறிக்கிறது. அதாவது அயோத்தி மன்னர் தசரதனுக்கும் கோசலைக்கும் மகனாக, தீய சக்திகளை அழித்து தர்மத்தை நிலைநாட்ட விஷ்ணுவின் ஏழாவது அவதாரமாக இராமர் நிலவுலகில் தோன்றினார். ஏகபத்தினி விரதனாகவும், தந்தை சொற்படி நடந்த உத்தம புத்திரனாகவும், நீதி தவறாத மன்னனாகவும் வாழ்ந்து காட்டிய அவரது வாழ்க்கை முறை இன்றும் ஒரு முழுமையான மனித வாழ்விற்கு இலக்கணமாகத் திகழ்கிறது. இந்த நன்நாளில் வீடுகளில் இராமாயணப் பாராயணம் செய்தும், பானகம் மற்றும் நீர் மோர் தயாரித்து தானமாக வழங்கியும் மக்கள் தங்கள் பக்தியை வெளிப்படுத்துகின்றனர். ‘இராம இராஜ்ஜியம்’ என்று போற்றப்படும் நீதியான ஆட்சி முறையை உலகுக்கு உணர்த்திய அந்த மகாபுருஷரின் ஆசியால் உலகில் அமைதியும் நன்மையும் பெருகட்டும்.

50% LikesVS
50% Dislikes

கட்டுரையைப் பகிர்:

வணக்கம்! நான் கு. நந்தகுமார். வாசிப்பும் எழுத்தும் மீது ஆர்வம் கொண்டவன். பல்வேறு தலைப்புகளில் பயனுள்ள தகவல்கள் மற்றும் கருத்துகளை இந்த வலைப்பதிவின் மூலம் வாசகர்களுடன் பகிர்கிறேன்.

உங்கள் கருத்தை பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

Edit Template