
🔯 மேஷம் -ராசி: 🐐
குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் மறையும். எதிர்பாராத சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மறதி பிரச்சினைகள் குறையும். வரவுகளில் இருந்த தாமதம் விலகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். முதலீடு சார்ந்த எண்ணங்கள் மேம்படும். பெருந்தன்மையான செயல்களால் மதிப்புகள் உயரும்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 𝟱
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
⭐அஸ்வினி : வேறுபாடுகள் மறையும்.
⭐பரணி : பிரச்சினைகள் குறையும்.
⭐கிருத்திகை : மதிப்புகள் உயரும்.
◄•━━━━━━━━━━━━━━•►
♉ ரிஷபம் – ராசி: 🐂
செயல்பாடுகளில் ஒருவிதமான சேர்வுகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். மறைமுகமான சில பிரச்சினைகள் தோன்றி மறையும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சக ஊழியர்களிடம் விவாதம் இன்றி செயல்படவும். சூழ்நிலை அறிந்து கருத்துக்களை வெளிப்படுத்தவும்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 𝟮
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
⭐கிருத்திகை : ஏற்ற இறக்கமான நாள்.
⭐ரோகிணி : புரிதல் உண்டாகும்.
⭐மிருகசீரிஷம் : கருத்துக்களில் கவனம்.
◄•━━━━━━━━━━━━━━•►
♊ மிதுனம்- ராசி: 👬
திடீர் பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் செய்பவர்களுக்கு மாற்றமான சூழல் ஏற்படும். நினைத்த சில பணிகளில் தாமதம் ஏற்படும். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். விமர்சனப் பேச்சுகளை வெளிவட்டாரத்தில் தவிர்க்கவும். மாணவர்களுக்கு ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மேம்படும்.
💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 𝟲
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்
⭐மிருகசீரிஷம் : அனுபவம் கிடைக்கும்.
⭐திருவாதிரை : மாற்றமான நாள்.
⭐புனர்பூசம் : சிந்தனைகள் மேம்படும்.
◄•━━━━━━━━━━━━━━•►
♋ கடகம் – ராசி: 🦀
வெளியூர் தொடர்பான பணிகளில் சுபச்செய்திகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் வேண்டும். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 𝟮
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
⭐புனர்பூசம் : ஆதரவான நாள்.
⭐பூசம் : இன்னல்கள் குறையும்.
⭐ஆயில்யம் : நெருக்கடிகள் குறையும்.
◄•━━━━━━━━━━━━━━•►
♌ சிம்மம் – ராசி: 🦁
வியாபார பணிகளில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சமூக பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சிந்தனைப்போக்கில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். இழுபறியான வரவுகள் கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அந்நிய வர்த்தகத்தில் லாபம் மேம்படும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும்.
💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 𝟭
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
⭐மகம் : தன்னம்பிக்கையுடன் செயல்படவும்.
⭐பூரம் : குழப்பம் நீங்கும்.
⭐உத்திரம் : பொறுமையுடன் செயல்படவும்.
◄•━━━━━━━━━━━━━━•►
♍ கன்னி – ராசி: 👩
கணவன்-மனைவியிடையே புரிதல் அதிகரிக்கும். நீண்ட நாள் தடைப்பட்ட பணிகள் முடியும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். புண்ணிய ஸ்தல பயணங்கள் கைகூடி வரும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் திருப்தி ஏற்படும். மனதளவில் உற்சாகம் பிறக்கும்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 𝟲
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
⭐உத்திரம் : புரிதல் அதிகரிக்கும்.
⭐அஸ்தம் : பயணங்கள் கைகூடும்.
⭐சித்திரை : உற்சாகம் பிறக்கும்.
◄•━━━━━━━━━━━━━━•►
♎ துலாம் – ராசி: ⚖
சிறு சிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். புதிய நபர்களிடம் விழிப்புணர்வு வேண்டும். இனம் புரியாத சிந்தனைகளால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 𝟯
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
⭐சித்திரை : மாற்றம் உண்டாகும்.
⭐சுவாதி : சோர்வுகள் உண்டாகும்.
⭐விசாகம் : திருப்பங்கள் உண்டாகும்.
◄•━━━━━━━━━━━━━━•►
♏ விருச்சிகம் – ராசி: 🦂
மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். விலை உயர்ந்த பொருள்கள் மீது ஆர்வம் ஏற்படும். அடுத்தவர்களுக்கு உதவுவதில் கவனம் வேண்டும். உயர்கல்வியில் இருந்த குழப்பம் குறையும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரப் பணிகளில் சில உதவிகள் கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 𝟭
💠அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
⭐விசாகம் : தன்னம்பிக்கை பிறக்கும்.
⭐அனுஷம் : கவனம் வேண்டும்.
⭐கேட்டை : மகிழ்ச்சியான நாள்.
◄•━━━━━━━━━━━━━━•►
♐ தனுசு – ராசி: 🏹
சுபகாரியம் தொடர்பான முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக பணியிலிருந்த நெருக்கடிகள் குறையும். கடன் சார்ந்த பிரச்சினைகளில் உதவிகள் கிடைக்கும். கூட்டு வியாபாரப் பணிகளில் நிதானத்துடன் செயல்படுவது அவசியமாகும். சிக்கலான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்து வந்த கவலைகள் குறையும்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 𝟱
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
⭐மூலம் : முன்னேற்றமான நாள்.
⭐பூராடம் : நிதானத்துடன் செயல்படவும்.
⭐உத்திராடம் : கவலைகள் குறையும்.
◄•━━━━━━━━━━━━━━•►
♑ மகரம் – ராசி: 🦌
புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். உயர்கல்வி குறித்த எண்ணங்கள் உருவாகும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 𝟮
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
⭐உத்திராடம் : சிந்தனைகள் பிறக்கும்.
⭐திருவோணம் : பொறுமை வேண்டும்.
⭐அவிட்டம் : பிரார்த்தனைகள் நிறைவேறும்.
◄•━━━━━━━━━━━━━━•►
♒ கும்பம் – ராசி: 🍯
நினைத்த பணிகளில் அலைச்சல் ஏற்படும். மனதளவில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். கல்வியில் இருந்த ஆர்வமின்மை மறையும். உறவுகள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் நட்புகள் கிடைக்கும். ஆடம்பரப் பொருட்களில் ஆர்வம் ஏற்படும். வீடு மாற்ற சிந்தனைகள் ஏற்படும். விவசாயப் பணிகளில் ஆலோசனை வேண்டும்.
💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 𝟱
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
⭐அவிட்டம் : அலைச்சல் ஏற்படும்.
⭐சதயம் : புரிதல் அதிகரிக்கும்.
⭐பூரட்டாதி : ஆலோசனை வேண்டும்.
◄•━━━━━━━━━━━━━━•►
♓ மீனம் -ராசி: 🐟
எதிர்ப்புகளை சாதுர்யமாக வெற்றி கொண்டு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த தடைகள் குறையும். குறுகிய தூர பயணத்தின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 𝟭
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
⭐பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
⭐உத்திரட்டாதி : மாற்றம் உண்டாகும்.
⭐ரேவதி : தன்னம்பிக்கை மேம்படும்.
┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈