இராசி பலன்கள், ஆவணி: 03, வியாழக்கிழமை, 20.08.2026.

🔯 மேஷம் -ராசி: 🐐

எதிலும் அவசரப்பட்டு செயல்படுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்களிடம் வளைந்து கொடுத்து செல்வது நல்லது. வரவேண்டிய வரவுகள் தாமதமாக கிடைக்கும். உயர் அதிகாரிகள் இடத்தில் பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சில பொறுப்புகளால் மாற்றம் ஏற்படும்.

🧭அதிர்ஷ்ட திசை : கிழக்கு
🔢அதிர்ஷ்ட எண் : 1
🎨அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

⭐️அஸ்வினி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
⭐️பரணி : வரவுகள் தாமதமாகும்.
⭐️கிருத்திகை : மாற்றம் ஏற்படும்.


♉ ரிஷபம் – ராசி: 🐂

விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் அமையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். தந்தைவழி உறவுகள் ஆதரவாக இருப்பார்கள். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும், நட்பும் கிடைக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.

🧭அதிர்ஷ்ட திசை : தெற்கு
🔢அதிர்ஷ்ட எண் : 9
🎨அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

⭐️கிருத்திகை : புதுமையான நாள்.
⭐️ரோகிணி : ஆதரவான நாள்.
⭐️மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


♊ மிதுனம்- ராசி: 🤼‍♀️‍

வெளிவட்டாரங்களில் மதிப்புகள் உயரும். உடன் இருப்பவர்கள் ஆதரவால் சில காரியங்கள் நடைபெறும். வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வதில் ஆர்வம் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான சில வியூகங்களை அமைப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள் வழியில் அனுகூலமான சூழல் ஏற்படும். இடம் பூமியால் நினைத்த லாபங்கள் கிடைக்கும்.

🧭அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
🔢அதிர்ஷ்ட எண் : 8
🎨அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்

⭐️மிருகசீரிஷம் : மதிப்புகள் உயரும்.
⭐️திருவாதிரை : ஆர்வம் உண்டாகும்.
⭐️புனர்பூசம் : லாபகரமான நாள்.


♋ கடகம் – ராசி: 🦀

முக்கிய முடிவுகளில் பொறுமை வேண்டும். நினைத்த காரியங்கள் இழுபறியாகி நிறைவு பெரும். பெற்றோருடன் வீண் வாக்குவாதங்கள் வரக்கூடும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பான அலைச்சல் மேம்படும். மனதளவில் சிறுசிறு குழப்பங்கள் தோன்றி மறையும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் விவேகத்துடன் செயல்படவும்.

🧭அதிர்ஷ்ட திசை : கிழக்கு
🔢அதிர்ஷ்ட எண் : 7
🎨அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

⭐️புனர்பூசம் : பொறுமை வேண்டும்.
⭐️பூசம் : அலைச்சல் மேம்படும்.
⭐️ஆயில்யம் : விவேகத்துடன் செயல்படவும்.


♌ சிம்மம் – ராசி: 🦁

பொருளாதார நிலை மத்திமமாக இருக்கும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். சில சூழ்நிலைகள் சாதகமாக அமையும். கணவன் மனைவியிடையே வேறுபாடுகள் தோன்றும். வேலையில் பொறுப்புகள் அதிகரிக்கும். உறவினர்களின் வருகை உண்டாகும். விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் மனஅமைதி உண்டாகும்.

🧭அதிர்ஷ்ட திசை : மேற்கு
🔢அதிர்ஷ்ட எண் : 4
🎨அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

⭐️மகம் : ஆசிகள் கிடைக்கும்.
⭐️பூரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
⭐️உத்திரம் : அமைதியான நாள்.


♍ கன்னி – ராசி: 👩

சிறு தூர பயணங்களால் தெளிவுகள் ஏற்படும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுகள் மேம்படும். எந்த ஒரு செயலையும் துணிச்சலோடு செய்வீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். உத்தியோகத்தில் உயர்வான வாய்ப்புகள் கிடைக்கும்.

🧭அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
🔢அதிர்ஷ்ட எண் : 3
🎨அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

⭐️உத்திரம் : ஆதரவுகள் மேம்படும்.
⭐️அஸ்தம் : தேவைகள் பூர்த்தியாகும்.
⭐️சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.


♎ துலாம் – ராசி: ⚖️

இழுபறியான காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். எதிராக பேசியவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வாடிக்கையாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய முயற்சிகளில் ஆலோசனை வேண்டும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்.

🧭அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
🔢அதிர்ஷ்ட எண் : 6
🎨அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

⭐️சித்திரை : குழப்பம் நீங்கும்.
⭐️சுவாதி : ஆதரவான நாள்.
⭐️விசாகம் : கலகலப்பான நாள்.


♏ விருச்சிகம் – ராசி: 🦂

நீண்ட நாள் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உடன் இருப்பவர்களின் உணர்வுகளை புரிந்து செயல்படவும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். உடல் ஆரோக்கியம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். முடியாத சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். விற்பனைத் துறையில் பொறுமையை கையாளவும்.

🧭அதிர்ஷ்ட திசை : கிழக்கு
🔢அதிர்ஷ்ட எண் : 5
🎨அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

⭐️விசாகம் : உதவிகள் கிடைக்கும்.
⭐️அனுஷம் : குழப்பங்கள் விலகும்.
⭐️கேட்டை : பொறுமை வேண்டும்.


♐ தனுசு – ராசி:  🏹

சுபகாரிய தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. நெருக்கமானவர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும்.

🧭அதிர்ஷ்ட திசை : வடக்கு
🔢அதிர்ஷ்ட எண் : 8
🎨அதிர்ஷ்ட நிறம் : மயில் நீல நிறம்

⭐️மூலம் : அலைச்சல்கள் உண்டாகும்.
⭐️பூராடம் : வேறுபாடுகள் மறையும்.
⭐️உத்திராடம் : அனுகூலமான நாள்.


♑ மகரம் – ராசி: 🦌

நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்தவர்களின் சந்திப்புகள் மனதிற்கு ஒருவித மாற்றத்தை உருவாக்கும். வியாபார பணிகளில் இழுபறிகள் குறைந்து லாபங்கள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களுடன் பேசும்பொழுது கருத்துக்களில் கவனம் வேண்டும். தனவரவுகளில் இருந்து வந்த நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். ஆரோக்கியம் தொடர்பான செயல்களில் விழிப்புணர்வு வேண்டும்.

🧭அதிர்ஷ்ட திசை : மேற்கு
🔢அதிர்ஷ்ட எண் : 4
🎨அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

⭐️உத்திராடம் : மாற்றமான நாள்.
⭐️திருவோணம் : ஒத்துழைப்புகள் அதிகரிக்கும்.
⭐️அவிட்டம் : விழிப்புணர்வு வேண்டும்.


♒ கும்பம் – ராசி: 🍯

கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கௌரவ பொறுப்புகள் மூலம் மதிப்புகள் மேம்படும். குழந்தைகளைப் பற்றிய புரிதல்கள் மேம்படும். வீடு தொடர்பான முயற்சிகள் கைகூடும். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உருவாக்கும். ஆடம்பரமான செலவுகளை குறைத்துக் கொள்ளவும். உடல் ஆரோக்கிய தொடர்பான இன்னல்கள் குறையும்.

🧭அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
🔢அதிர்ஷ்ட எண் : 7
🎨அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

⭐️அவிட்டம் : மதிப்புகள் மேம்படும்.
⭐️சதயம் : முயற்சிகள் கைகூடும்.
⭐️பூரட்டாதி : இன்னல்கள் குறையும்.


♓ மீனம் – ராசி: 🐟

மனதளவில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். கணவன் மனைவி இடையே ஒத்துழைப்புகள் மேம்படும். தள்ளிப்போன சில விஷயங்கள் சாதகமாக முடிவு பெறும். கடன் தொடர்பான இன்னல்கள் குறையும். திட்டமிட்ட பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வியாபார பணிகளில் புதிய வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகப் பணிகளில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும்.

🧭அதிர்ஷ்ட திசை : தெற்கு
🔢அதிர்ஷ்ட எண் : 3
🎨அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

⭐️பூரட்டாதி : குழப்பங்கள் குறையும்.
⭐️உத்திரட்டாதி : இன்னல்கள் குறையும்.
⭐️ரேவதி : ஆதரவான நாள். வியாழக்கிழமை
     

50% LikesVS
50% Dislikes

கட்டுரையைப் பகிர்:

வணக்கம்! நான் கு. நந்தகுமார். வாசிப்பும் எழுத்தும் மீது ஆர்வம் கொண்டவன். பல்வேறு தலைப்புகளில் பயனுள்ள தகவல்கள் மற்றும் கருத்துகளை இந்த வலைப்பதிவின் மூலம் வாசகர்களுடன் பகிர்கிறேன்.

உங்கள் கருத்தை பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

Edit Template