
நார்வே செஸ் தொடரின் மூன்றாவது சுற்றில், இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா,
உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை அவரது சொந்த மண்ணிலேயே வீழ்த்தி வெற்றி பெற்றார்.
2 ஆண்டுகளுக்கு முன்பு இதே தொடரில் கார்ல்சனுக்கு எதிராகத் தனது முதல் கிளாசிக்கல் வெற்றியைப் பதிவு செய்திருந்த பிரக்ஞானந்தா,
தற்போது மீண்டும் ஒருமுறை அவரை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.