திருத்தணி அருகே தரணி வராகபுரம் கிராமத்தில் உள்ள ஏரியில் அரசு அளவை மீறி முறைகேடாக செங்கல் சூளைக்கு மண் எடுப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் செய்தி சேகரிக்கச் சென்ற திருத்தணி மாலை முரசு செய்தியாளர் வினோத்குமாரை வீடியோ எடுக்க விடாமல் முருகம்பட்டு அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி செய்தி எடுக்க விடாமல் தடுத்து செல்போனை பிடுங்கி உடைத்தும் தகாத வார்த்தையால் திட்டி தாக்கியும், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதுகுறித்து திருத்தணி D1 காவல் நிலையத்தில் மாலை முரசு செய்தியாளர் வினோத்குமார் அவர்கள் புகார் அளித்தும் அப்புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் மண் குவாரி உரிமையாளரிடம், பொய் புகாரை பெற்று செய்தியாளர் வினோத்குமார் மீது பொய் வழக்கு பதிவு செய்ய காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர். 5 மணி நேரத்துக்கு மேலாக செய்தியாளர் வினோத்குமாரை எங்கு வைத்துள்ளார்கள் என்ற தகவல் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். புகார் கொடுத்த செய்தியாளர் மீதே நடவடிக்கை எடுப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.உண்மை செய்தியை வெளியிடும் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் பொய் வழக்கு போட்டு அச்சுறுத்தல் செய்வது, பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்படும் கருத்து சுதந்திர ஒடுக்குமுறையாகும். தவறுகளைச் சுட்டிக்காட்டுவது ஊடகங்களின் தார்மீக கடமையாகும். எனவே செய்தியாளர் திரு.வினோத்குமார் அவர்களை உடனடியாக விடுவித்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் ஆய்வாளர் சிவகுமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் வலியுறுத்துகிறது.
